பெரம்பலூர்: பெரம்பலூரில் 9ம் வகுப்பு மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த சோலமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு ராஜா. இவரது மகன் பரத் ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இன்று பரத் ராஜ் செய்த தவறு ஒன்றிற்காக அவனது விடுதி வார்டன் சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். அங்கிருந்து தப்பிய பரத் ராஜ், சொந்த ஊர் திரும்பி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். தற்போது சிறுவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.