கோல்கட்டா: மாணவிக்கு சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவி அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுநீர் குடிக்க வைத்த வார்டன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேற்கு வங்கம் கோபால்நகர் கிரிபாலா பாலிகா வித்யாலயா பள்ளியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இங்கு 8 ம் வகுப்புஅறையில் இருந்த மாணவிகளிடம் பணம் திருடப்பட்டிருக்கிறது. இது குறித்து ரூபாலி என்ற ஒரு மாணவியிடம் சந்தேகப்ட்டார் ஆசிரியை . இந்த மாணவியை அழைத்து அனைவரது முன்பாக அனைத்து ஆடைகளையும் களைய சொல்லியிருக்கிறார். எவ்வளவோ அழுதும் ஆசிரியை வேகம் குறையவில்லை . கண்ணீர் கதம்பளுடன் அந்த மாணவி ஏங்கி அழுதபடி வெக்கி குனிந்து நின்றாள். இது மற்ற மாணவிகளுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
வகுப்பறையில் நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதனையடுத்து அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். புகார் வந்திருப்பது உண்மைதான் இது குறித்து விசாரித்து வருகிறோம். யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஜெயந்தா முகர்ஜி கூறினார்.
நன்றி: தினமலர்