புதுடில்லி: தனது மகளை ராகுல் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு ரூ. 15 கோடி தருவதாகவும், மறுக்கும் பட்சத்தில் விரதம் இருந்து உயிரை மாய்ப்பேன் என்று டில்லியில் பெண் ஒருவர் விநோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மிட்டே என்ற பத்திரிக்கை மட்டும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த விவரம் வருமாறு: டில்லி ஜந்தர் மந்தரில் அமர்ந்து கடந்த 9ம் தேதி முதல் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். மிக எளிமையாக இருக்கும் இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஓம் சாந்திசர்மா. மவுனமாக இருந்து வரும் இவர் யாரிடமும் பேசுவதில்லை. சில நேரங்களில் ராகுல் பெயரை சொல்லி மந்திரமும் சொல்லிக்கொள்கிறார். தனது மகளுக்கு தகுதியான நபர் யாரும் கிடைக்கவில்லை என்றும் , அதே நேரத்தில் ராகுல்தான் சரியான மாப்பிள்ளை என்றும். அவர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளும் தருணத்தில் தான் ரூ. 15 கோடி தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்வராக இருக்கலாம் என்றும், இவர் போராட்டம் இருப்பது தொடர்பாக யாரிடமும் அனுமதி எதுவும் வாங்கவில்லை என்றும் கூறினர். இருப்பினும் போலீசார் முறைப்படி விசாரிக்க துவங்கியுள்ளனர்.
நன்றி: தினமலர்