சென்னையில் இனிமேல் கள்ளக்காதல் ஜோடிகள் சுதந்திரமாக உலவ முடியாது என்று தெரிகிறது. கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மற்றவர்கள் முகம் சுளிப்பது போலவும், அநாகரீகமாகவும் நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளை, குறிப்பாக கள்ளக்காதல் ஜோடிகளை உடனே கைது செய்வது குறித்து சென்னை காவல்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
கடற்கரைக்கு காற்று வாங்கலாம் என்று போனால் கண்டதையும் பார்க்க நேரிடுகிறது. இதனால் மக்கள் குறிப்பாக கணவர், குழந்தைகளுடன் செல்லும் பெண்கள் கடும் முகச் சுளிப்புக்கு ஆளாகிறார்கள். நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, முத்தமிடுவது, கைகளைப் பிணைந்து பிசைந்து விளையாடுவது, சில்மிஷங்கள் செய்வது என களேபரப்படுத்துகின்றனர் காதல் ஜோடிகள்.
படகு இடுக்குகளில் போய் உட்கார்ந்து கொண்டு பேசுவது, முத்தமிடுவது என்று பயமுறுத்துகின்றனர். 'அதைத்' தவிர மற்ற எல்லாவற்றையும் பீச்சிலேயே முடித்து விடுகிறார்கள் இவர்கள்.
இளம்காதல் ஜோடிகளை விட இந்தக் கள்ளக்காதல் ஜோடிகளின் தொல்லைதான் ஏகமாக உள்ளது. மற்றவர்களைப் பற்றிக் கவலையே படாமல் வந்த வேலையிலேயே மும்முரமாக இருக்கும் இவர்களால் மற்றவர்களுக்குத்தான் ரொம்ப 'சங்கட்டமாக' இருக்கிறது.
பார்க், பீச் என்றில்லை, ரயில்கள், ரயில் நிலையங்கள், தியேட்டர்கள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகள் கூட்டம்தான். சென்னை ரயில் நிலையங்கள் அனைத்திலும் இந்த காதல் ஜோடிகளை தவறாமல் பார்க்கலாம். உட்கார்ந்திருக்கிறவர்களில் முக்கால்வாசிப் பேர் காதல் ஜோடிகளாகத்தான் தென்படுகின்றனர்.
இந்த நிலையில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக 6 அதிகாரிகளை கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்ட 500 ஜோடிகளைப் பிடித்த இவர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பினர். சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அப்படியும் அநாகரீக ஜோடிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக கள்ளக்காதலர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம். இதனால் இனிமேல் பிடிபடும் ஜோடிகளை அவர்கள் கள்ளக்காதலர்களாக இருந்தால் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி: tamil.oneindia
நன்றி: tamil.oneindia