வாஷிங்டன் : குழந்தைகளை, நாய்களோடு சேர்ந்து விளையாடவிட்டால், பல்வேறு தொற்றுநோய்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தைகள் நலன் தொடர்பாக, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பீடியாட்ரீக்ஸ் ஜர்னலில், இந்த ஆய்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நாய்களுடன் நெருங்கிப் பழகும் குழந்தைகளுக்கு காதுகளில் ஏற்படும் தொற்றுகள், சுவாசப்பாதையில் ஏற்படும் தொற்றுகள் உள்ளிட்டவைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும்,மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் செய்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.