அஜீத் நடிப்பில் மெகா ஹிட்டான படங்கள் அனைத்துமே நகரத்தை மையமான கொண்டு எடுக்கப்பட்டது தான். சமீபத்தில் வெளியான பில்லா, அசல், மங்காத்தா உள்ளிட்ட படத்தின் கதைகள் நகரத்தில் எடுக்கப்பட்டது. மேலும் தற்போது வெளியாக இருக்கும் பில்லா-2 திரைப்படத்தின் கதையும் அப்படிதான். தொடர்ந்து நகரத்தின் பின்னணியாக கொண்டு கதை அமைவதால் சற்று மாறுதலாக கிராமத்து வேடத்தில் நடிக்க அஜீத் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியானாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.