லாலாப்பேட்டை,: கிருஷ்ணராயபுரம் அருகே இறந்ததாக கருதப்பட்டவர் உயிரோடு இருந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கட்டளை ரங்க நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 55. இவர் விவசாயம் செய்து வருகிறார். இரு நாட்களுக்கு முன், உடல்நிலை சரியில்லாமல் கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் .
இந்த நிலையில், "இன்று மதியம் முத்துசாமி இறந்து விட்டார்' என, கருதி அவரது சொந்த ஊரில் உள்ள, சுடு காட்டுக்கு தகனம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால், உறவினர்கள், முத்துசாமியின் உடல் மீது விழுந்து அழும்போது, எதிர்பாராவிதமாக அவரது உடல் அசைந்துள்ளது. முத்துசாமி இறக்கவில்லை என, தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முத்துசாமியை, உடனடியாக சுடுகாட்டில் இருந்து புலியூரில் உள்ள, நிர்மல் மருத்துவமனையில் சேர்த்தனர்.இறந்தவராக கருதப்பட்ட விவசாயி முத்துசாமி, உயிருடன் உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.