கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால், மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 121 பேர் பலியாகி உள்ளனர். மனித உயிர்கள் மட்டுமல்லாது, வனவிலங்குகளும் அதிகளவில் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகப் பிரசித்தி பெற்ற கஜிரங்கா உயிரியல் பூங்காவில் 13 காண்டாமிருகங்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வனவிலங்குகளும் பலியாகி உள்ளன.