மதுரை:""பெற்றோரின் எதிர்ப்பால், காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்படும்,'' என, மதுரை எஸ்.பி., பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.மதுரை அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரி. இவரது உறவினர் விஜயகுமார். இருவரும் காதலித்தனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி, நேற்று முன் தினம் நாகமலை புதுக்கோட்டையில் தற்கொலை செய்து கொண்டனர்.
பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறியதாவது :21 வயது நிறைவடைந்த ஆணும், 18 வயது நிறைவடைந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள சட்டப்படி உரிமை உண்டு. இதை பெற்றோர் எதிர்க்கக்கூடாது. அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டால், எதிர்ப்பாளர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்படும். அதேபோல், சட்டத்திற்கு புறம்பாகவும் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது. மீறினால், பெற்றோர், அதற்கு உடந்தையானவர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும், என எச்சரித்துள்ளார்.