விசாகப்பட்டினத்தில் உள்ள ஒஸ்.எஸ்.ராஜசேகர ரெட்டி விளையாட்டு அரங்கில் வரும் 16ம்தேதி நட்சத்திர கிரிக்கெட் நடைபெறவுள்ளது. அனாதை குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உதவ இந்த போட்டி மூலம் நிதி திரட்டப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி, தென்னிந்திய சினிமா கலைஞர்கள் பலரும் இடம்பெற உள்ளனர். அத்துடன் பிரபல சினிமாக்களில் இடம்பெற்ற காட்சிகளை ரசிகர்களுக்காக முன்னணி நடிகர்கள் நடித்து காட்டப் போகிறார்களாம். போட்டியில் பங்கேற்கும் நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.