பெங்களூரு : ""நித்யானந்தா பெறும் நன்கொடை, முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள கால்நடைகளுக்கு, சரியாக உணவு அளிக்காமல் துன்புறுத்துகின்றனர்,'' என்று, "ஸ்பந்தனா' அசோசியேஷன் பொது செயலர் வீணா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக பார் கவுன்சில், கால்நடை பராமரிப்புத் துறை, வருமான வரித்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, இந்து அறநிலையத் துறை ஆகியவற்றுக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து, பெங்களூரு பிரஸ் கிளப்பில், "ஸ்பந்தனா' அசோசியேஷன் பொது செயலர் வீணா கூறியதாவது:கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக, பல ஆண்டுகள் பணியாற்றிய ரவிநாயக், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராம்நகர் நீதிமன்ற வளாகத்தில், நித்யானந்தாவுடன் சென்றது அதிர்ச்சியளிக்கிறது. நடுநிலையாக பணியாற்ற வேண்டியவர், வழக்கறிஞராக மீண்டும் பணி செய்வது, நியாயத்துக்கு புறம்பானது. எனவே, உறுப்பினர் பதவியிலிருந்து, கர்நாடக பார் கவுன்சில், அவரை விலக்க வேண்டும்.
பரிசோதிக்க வேண்டும்:நித்யானந்தா பீடத்திலுள்ள அனைத்து கால்நடைகளையும் பரிசோதிக்க வேண்டும். சரியான உணவு, மருத்துவ வசதி அளிப்பதில்லை. அனைத்தையும், நெருக்கமாக ஒரே இடத்தில் வைத்திருப்பது பற்றி விசாரணை நடத்தி, அனைத்து கால்நடைகளையும், கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், அரசு கொண்டு வர வேண்டும்.பொது மக்களிடமிருந்து, ஏராளமான நன்கொடையை, நித்யானந்தா பெற்று வருகிறார். இப்பணத்தை, தன் சொந்த செலவுக்கு பயன்படுத்துகின்றார். நன்கொடை யாரிடமிருந்து வருகிறது, எப்படி செலவழிக்கப்படுகிறது என்பது குறித்து, வருமான வரி துறை ஆய்வு செய்ய வேண்டும். நித்யானந்தா பெயரில், 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதற்கான அனைத்து ஆவணங்களும், என்னிடம் உள்ளன. இந்த நிறுவனங்கள் குறித்து, வருமான வரித்துறை எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இந்நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளதால், வரும் பணத்தை டாலராக பெறுகின்றனர். அவரது வங்கி கணக்குகளை சோதனையிட வேண்டும். நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கும் பணத்தை, தன் சொந்த செலவுக்காக பயன்படுத்துவது, வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து விசாரிக்க வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல்:பிடதி ஆசிரமத்தில், பக்தர்கள் என்ற பெயரில், ஏராளமான பெண்கள், குழந்தைகளை அடைத்து, ஒப்பந்தம் என்ற பெயரில், பெண்களிடம் கையெழுத்து வாங்கி, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் நடக்கிறது. நமது நாட்டு சட்டப்படி, இது போன்ற ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. 18 வயதுக்குட்பட்ட பெண்கள், குழந்தைகள், மாந்திரீக செயல்பாடு பரிசோதனைக்காக பயன்படுத்தப்படுகின்றனர்.ஆபாச வழிபாடுகளில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், உடல் ரீதியாகவும், மன அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கொடூரங்கள் குறித்து, மகளிர், குழந்தைகள் நலத்துறையினர் தலையிட்டு, நித்யானந்தா ஆசிரமத்தில் உடனடியாக சோதனையிட வேண்டும்.
பக்தர்களை ஏமாற்றுகிறார்:கோவில்கள் பெயரில் வசூலிக்கும் நன்கொடைகளை, நித்யானந்தா தவறாக பயன்படுத்துகிறார். ஆசிரமத்தின் பொது நன்கொடை, அவர் நடத்தும் முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பக்தர்களை ஏமாற்றி முக்தி அளிப்பதாகவும், துறவற வாழ்க்கையில் ஞானமளிப்பதாகவும் கூறி ஏமாற்றுகிறார். பெண் பக்தர்கள், ஆசிரம ஊழியர்களை தவறாக பயன்படுத்துகிறார். நித்யானந்தா ஆசிரமத்தில் நுழையும் பெண்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றனர். இது குறித்து, இந்து அறநிலையத் துறை கமிஷனர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வீணா கூறினார்.
5 கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா நித்யானந்தா?""நித்யானந்தா, ஆசிரமம் நடத்துகிறாரா அல்லது வர்த்தகம் நடத்துகிறாரா? அவர் உண்மையான சன்னியாசியா என்பது உட்பட ஐந்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்,'' என்று, ஸ்பந்தனா அசோசியேஷன் வீணா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு பிரஸ் கிளப்பில், அவர் கூறியதாவது:
*நித்யானந்தா ஆசிரமம் நடத்துகிறாரா அல்லது வர்த்தகம் நடத்துகிறாரா?
*நீங்கள் (நித்யானந்தா) ஐந்து வயது குழந்தை என அறிவித்தீர்களா?
*உண்மையான சன்னியாசி அல்லது குரு என்றால் காவிஉடை அணிந்து, சாதாரண, உண்மையான வாழ்க்கை வாழ வேண்டும். ஆனால், விதவிதமான ஆடைகள், நகைகள் அணிவது ஏன்? உண்மையான சுவாமிகளா?
*மருத்துவப் பரிசோதனைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும், அதை வாங்காமல் தப்பிக்க நினைப்பது ஏன்?
*தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில், "சிடி'யில் இருப்பது போலி மற்றும் மார்பிங் செய்யப்பட்டது என்று செய்தித் துறையினரிடம் தெரிவித்துள்ளீர்கள். ஆனால், இந்தியாவிலுள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், "சிடி' உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. நமது நாட்டின் ஆய்வு தவறா?
மேற்கண்ட ஐந்து கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க வேண்டும்.
ஸ்பந்தனாஅசோசியேஷன் பணி?பெங்களூரு, பசவேஸ்வர நகர் காயத்ரி லே-அவுட்டைச் சேர்ந்த, "ஸ்பந்தனா அசோசியேஷன்' ஒன்பது ஆண்டுகளாக பல அமைப்புகளின் முறைகேடுகளுக்கு எதிராக போராடி வருகிறது."நித்யானந்தா ஆர்கனைசேஷன்' போலியானது என்று அமெரிக்கா கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, நித்யானந்தாவின் முறைகேடுகளை வெளிப்படுத்த, "ஸ்பந்தனா அசோசியேஷன்' பொதுச் செயலர் வீணா முடிவு செய்தார்.இதையடுத்து, நித்யானந்தாவுக்கு எதிராக போராடி வரும் லெனின் கருப்பனுடன் கைகோர்த்தார். இருவரும் பெங்களூரு பிரஸ் கிளப்பில் நேற்று நிருபர்களைச் சந்தித்தனர்.