பிரபல இயக்குனர் பாலா இயக்கதில் உருவாகும் 6வது படம் பரதேசி. இதில் கதாநாயகனாக அதர்வா முரளி, நாயகியாக வேதிகா நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடந்து, நிறைவடைந்துள்ளது. பொதுவாக பாலா படமென்றால் சூட்டிங் இழு இழுவென்று இழுத்துக் கொண்டே போகும். அதனை தயாரிப்பாளர் கூட தட்டிக் கேட்க முடியாது. ஆனால் இந்த படத்தை மிக குறுகிய காலத்தில் பாலா எடுத்து முடித்துள்ளார். அதாவது 80 நாள்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் படத்தின் ரிலீஸ தேதியை விரைவில் எதிர்பார்க்கலாம்.