கம்போடியா : கம்போடியாவில் மர்மநோய் தாக்கி 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதுதொடர்பாக, உலக சுகாதார மையத்தின் செய்தித்தொடர்பாளர் அபாலக் பாடியாசெவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 3 மாதங்களில் மட்டும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 62 குழந்தைகளில் 61 பேர் பலியாகியுள்ளனர். மர்மநோய் தொற்று குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளே, இந்நோய்க்கு அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.