கொட்டாம்பட்டி: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே ஏ. மலம்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) வயது 17 . இவர் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும் இவரது தாய்மாமன் அழகுராஜாவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் தீர்மானித்தனர். பெண் மேஜராகாததால் மேலூர் தாசில்தார் அலுவலகம் மூலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஒரு கோயிலில் ரகசிய திருமணம் செய்ய முயன்ற இருதரப்பு பெற்றோர்களையும் போலீசார் கைது செய்தனர்.