லண்டன்:பிரிட்டனில் கேண்டீன் பெண் ஊழியர் ஒருவர், அங்கு காபி குடிக்க வந்த பிரதமரை காத்திருக்க வைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனால் சுமார் 10 நிமிடம் காபிக்காக பிரதமர் காத்திருந்தார். இது குறித்து டெய்லி மெயி்ல் பத்திரிகையில்கூறப்பட்டிருப்பதாவது:
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஆயுதப்படை தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அலுவலக காரில் சென்றார். பிளைமோவுத் பகுதியில் வந்த போது வழியில் சான்விஜ்பாக்ஸ் பிளஸ் காபி ஷாப்பில் காரை நிறுத்த சொல்லி அங்கு சென்று காபி குடிக்க கடைக்குள் சென்றார்.
அங்கிருந்த பெண் ஊழியர் ஷீலா தாமஸ், பிரதமர் என தெரியாமல், வரிசையில் நிற்குமாறு கூறினார். வரிசையில் நிற்க முடியாது சீக்கிரம் காபி கொடுக்குமாறு கூறினார். உடனே ஆத்திரம் அடைந்த ஊழியர், தான் பணியில் பிஸிசியாக இருப்பதால் உடனேதரமுடியாது வரிசையில் நிற்குமாறு கூறி வாக்குவாதம் செய்தார்.
பின்னர் பிரதமரின் உதவியாளர்கள் அங்கு வந்த பின்னர் தான் கடையில் காபி குடிக்க வந்தவர் பிரதமர் டேவிட்கேமரூன் என தெரிந்தது. அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர் மன்னிப்பு கேட்டார். எனினும் அவரின் வாக்குவாதத்தினால் அங்கு 10 நிமிடம் காபிக்காக பிரதமர் கேமரூன் காத்திருக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருநு்தது.