இந்தியாவின் முதல் ஜனாதிபதியின் சேமிப்பு வங்கி கணக்கு கடந்த 50 ஆண்டுகளாக பீகாரில் வங்கி ஒன்றில் இன்னும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.இது வரை இருப்பு ரூ. 1,812 உள்ளது. இதனை வங்கி அதிகாரிகள் பராமரித்து வருவதாக பெருமையுடன் கூறி வருகின்றனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திரபிரசாத் கடந்த 1952-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1884-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி ஷிவான் மாவட்டம் ஜெராதி கிராமத்தில் பிறந்தார். காங்கிரஸ் ஆட்சியி்ல் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களை வகித்த இவர். கடந்த 1952-ம் ஆண்டு இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரு முறை ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திரபிரசாத், 1963-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி இறந்தார். எனினும் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் 1962-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியன்று பீகார் மாநில தலைநகர் பாட்னா, கண்காட்சி சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், தனது பெயரி்ல் சேமிப்பு கணக்கை துவக்கினார். அவரது சேமிப்பு கணக்கு இன்று வரை செயல்பாட்டில்தான் உள்ளது என வங்கி நிர்வாகம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.
இருப்பு ரூ.1,812: இது குறி்த்து வங்கியின் சீனியர் மேலாளர் எஸ்.எல். குப்தா கூறுகையில், இந்தியாவின் முதல் ஜனாதிபதி, தனது சேமிப்பு வங்கி கணக்கை எங்கள் வங்கியில் வைத்துள்ளது பெருமையாக உள்ளது. தற்போது அவரது சேமிப்பு வங்கி கணக்கு ‘ 0380000100030687 ’-என்ற எண்ணில் அவரது புகைப்படமும் ஓட்டப்பட்டுள்ளது. இதனை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆடிட்செய்து இவரது கணக்கில் வட்டி தொகையை செலுத்தி வருகிறோம். இதுவரை அவரது கணக்கி்ல ரூ. 1,813 இருப்பு உள்ளது. இத்தொகையிவைன சொந்தம் கொண்டாட இதுவரை யாரும் வரவில்லை என்றார்.