விரைவில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில், தமது கட்சி ஆதரவு யாருக்கு என்று தெரிவிக்காத நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி தேர்தலோடு சேர்த்து துணை ஜனாதிபதி தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் 14வது ஜனாதிபதிக்கான தேர்தல், இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பிஜூ ஜனதா தள கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் பி ஏ சங்மாவை வேட்பாளராக களமிறக்கிய நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற பரபரப்பு நிலவிய நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் உடன் சேர்ந்து. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமை ஆதரித்தார். ஆனால், அப்துல் கலாம் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இந்நிலையில், மம்தாவுடன் இணைந்து செயல்பட்ட முலாயம் சிங், திடீரென, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியதை தொடர்ந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை, ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், சங்மாவிற்கு ஆதரவு அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்தது.
மம்தா ஆதரவு யாருக்கு ? : பிரணாப்பிற்கும், சங்மாவிற்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் கட்சிகளி்ன் ஆதரவைப் பெற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசத் தயார் என்று இருவரும் அறிவித்துள்ள நிலையில், இதுவரை மம்தா யாரையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு 3 நாட்கள் முன்பு, அதாவது 16ம் தேதி, தனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிக்க உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் அன்சாரி - காங்கிரஸ் : ஜனாதிபதி தேர்தல் பரபரப்பு சற்று அடங்கியநிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீத் அன்சாரியையே, மீண்டும் அப்பதவியின் வேட்பாளராக களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
மம்தா கடும் எதிர்ப்பு : ஹமீத் அன்சாரியை மீண்டும் துணை ஜனாதிபதியாக்கும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு, மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, லோக்பால் மசோதா குறித்து ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது, மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ஹமீத் அன்சாரி. இவ்வாறு இருக்கையில், அவரை மீண்டும் இப்பதவியில் நீடிக்கச் செய்யும் திட்டம் கண்டனத்திற்குரியது என அவர் கூறியுள்ளார்.
மம்தா பரிந்துரை : கோபால் காந்தி மற்றும் கிருஷ்ணபோஸை, துணை ஜனாதிபதி வேட்பாளர் மம்தா பரிந்துரைந்துள்ளார்.
புறக்கணிப்பு? : ஜனாதிபதி தேர்தலில், தனது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவுபடுத்தாத நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்காக தான் பரிந்துரைத்த வேட்பாளர்களின் பெயர்களை பரிசீலிக்கப்படாத பட்சத்தில், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலை மம்தா புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி: தினமலர்