பாலசந்தர் இயக்கத்தில் வெற்றிபெற்ற தில்லு முல்லு, மன்மத லீலை ஆகிய இரண்டு படங்கள் விரைவில் ரீமேக் செய்யப்பட இருக்கின்றன. இதில் தில்லு முல்லு படத்தில் ரஜினிகாந்தும், மன்மத லீலை படத்தில் கமல் ஹாசனும் நடித்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த இரண்டு படங்களையும் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி ரீமேக் செய்ய இருக்கிறார். படத்தின் கதை கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப எடுக்க உள்ளனர். இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. அதேநேரத்தில் படத்தை இயக்குவது குறித்து பிரபல இயக்குனர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.