மத்திய அரசின் உயர்கல்வி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். கோர்ட் புறக்கணிப்பு போராட்டமும் நடத்தினர். சென்னையில் நடந்த போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் கபில் சிபல் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் உயர்கல்வி சட்ட மசோதா, பார்கவுன்சிலின் அதிகாரத்தை பறிப்பதாகவும், வெளிநாட்டு வக்கீல்களுக்கு உதவும் வகையில் இருப்பதாக வக்கீல்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் வக்கீல்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்கள். புதுச்சேரி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வக்கீல்கள் கோர்ட்களை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.