துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் அடுத்தததாக யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்கிறார். இதனை கவுதம் மேனன் இயக்குகிறார். முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் ஸ்ருதி ஹாசன் விஜயுடன் ஜோடி சேர இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தையில் இயக்குனர் தரப்பு ஈடுபட்டுள்ளது. அதே சமயம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் துப்பாக்கி படமும், கவுதமின் நீதானே என் பொன்வசந்தம் படமும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.அதில் துப்பாக்கி திரைப்படம் ஆகஸ்டு 15ம் தேதி திரைக்கு வரலாம் என கூறப்படுறது.