அயன் வெற்றிக்குப் பிறகு சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி இணைந்துள்ள படம் மாற்றான். சூர்யா இந்தப் படத்தில் இரு வேடங்கள் ஏற்றுள்ளார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். பாடல்கள் பதிவிற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதால் படத்தின் ஆடியோ இந்த மாதத்தில் வெளியிடப்படும் என ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஆடியோ உரிமையை ஏற்கனவே சோனி நிறுவனம் பெற்றுள்ளது. எனவே மிகபிரமாண்ட அளவில் மாற்றான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை விரைவில் எதிர்பார்க்கலாம்.