அஜீத் நடிப்பில் பில்லா-2 திரைப்படம் வரும் 13ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கான முன்பதிவும் தற்போதே தொடங்கிவிட்டது. இதனிடையே படம் திரைக்கு வர இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில் அஜீத் குமார் திருப்பதி சென்று சிறப்பு தரிசனம் செய்து திரும்பியுள்ளார். படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன் நடித்துள்ளார். சக்ரி டோலட்டி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவர்தான் அஜீத்தின் முந்தய பாடமான பில்லாவுக்கும் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.