பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் கர்நாடக அரசு சோதனை நடத்தியபோது ஆசிரம சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதால் அதற்காக ரூ 10 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிடதி ஆசிரமம் சீலிடப்படாமல் நித்யானந்தாவுக்கே திருப்பி அளிக்கப்பட்டதையடுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அஜித் குஞ்சால் தெரிவித்தார்.
நித்யானந்தா சார்பில் மூத்த வழக்குரைஞர் ரவி பி.நாயக் ஆஜரானார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா, ராம்நகர் மாவட்ட உதவி கமிஷனர் மற்றும் செய்தித் தொலைக்காட்சி ஒன்று ஆகியவை ரூ 10 கோடி தர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.