பில்லா-2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பவர் புரூனா அப்துல்லா. அம்மா அரேபியாவை சேர்ந்தவர், அப்பா இத்தாலியை சேர்ந்தவர். இந்த கலவையின் படைப்புதான் இந்த புரூனா. மெலிந்த உடல்வாகும், கவர்ந்து இழுக்கும் கண்களும், ஆளை மயக்கும் கவர்ச்சியுமாக காட்சியளிக்கிறார். பில்லா-2-வில் நடித்த அனுபவம் குறித்தும், அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து தினமலருக்கு பிரத்யேக பேட்டியளித்தார் புரூனா. அப்போது அவர் கூறியதாவது, அஜித்திடம் நிறைய கற்று கொண்டேன். அடுத்தவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும், நாம் பார்க்கும் வேலைக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, எல்லா மனிதர்களிடமும் எப்படி அன்பு செலுத்தி பழகுவது உள்ளிட்ட பல விஷயங்களை அவரிடம் கற்று கொண்டேன். மேலும் பணத்தால் எதையும் வாங்கிட முடியாது. அதை அஜித்துடன் நடித்தபோது கற்றுக்கொண்டேன். இப்படி ஒரு நல்ல மனிதர் கூட பழகியது ரொம்பவே சந்தோஷம் என்றார். மேலும் பில்லா-2வை தொடர்ந்து இந்தியில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லும் புரூனா, மேலும் நிறைய நல்ல நல்ல தமிழ் படங்களில் நடிக்க ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.
பில்லா-2வில் பெரும் பணக்காரியாக வரும் புரூனா, இப்படத்தில் வில்லனின்
மனைவியாக வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
பில்லா-2வில் பெரும் பணக்காரியாக வரும் புரூனா, இப்படத்தில் வில்லனின்
மனைவியாக வருகிறார் என்பது கூடுதல் தகவல்.