நாடு முழுவதும் ரயில்களில் தக்கால் முறையில் டிக்கெட் பெறுவதில் மாற்றம் இன்று முதல் அமலாகிறது. இனி ரயில்களில் பயணிப்போர் தக்கால் முறையில் டிக்கெட் வாங்க பதட்டமின்றி காலை 10 மணிக்கு வரலாம். முன்னதாக தக்கால் முறையில் டிக்கெட் வாங்க ரயில்நிலையங்களுக்கு 8 மணி முதலே வரவேண்டியிருந்தது. புரோக்கர்கள் , மொத்தமாக தக்கால் டிக்கெட்டினை வாங்கிச் சென்று அதிகவிலைக்கு விற்பதாக பல தரப்பிலும் புகார் எழுந்தது.எனவே தக்கால் முறையினை மாற்ற கோரிக்கை விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தக்கால் முறையில் டிக்கெட் வாங்கும் பயணிகள் காலை 8 மணிக்கு பதிலாக 10 மணி முதல் 12 மணி வரை தக்கால் டிக்கெட் வாங்க வரலாம் எனவும், அதுவரை அனுமதி பெற்ற டிராவல் ஏஜென்டுகள் தக்கால் டிக்கெட் வாங்க முடியாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த புதிய முறையினால், புரோக்கர்களின் தலையீடு இன்றி, ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக சாதாரண டிக்கெட் கவுன்டர்களில் நின்று தக்கால் டிக்கெட்டினை சிரமமின்றி ரயில் பயணிகள் வாங்க முடியும். மேலும் தமிழகத்தில் முக்கிய நகரங்களான சென்னை,மதுரை ,கோவை, திருப்பூர் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் தக்கால் டிக்கெட்டுகளுக்கென தனி கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய முறையில் தக்கால் டிக்கெட் வழங்கும் திட்டம் இன்று நாடு முழுவதும் அமலாகிறது. இம்முறை பயன்படுத்தி பொதுமக்கள் போர்வையில் புரோக்கள் அல்லது டிராவல் ஏஜென்டுகள் தக்கால் டிக்கெட் வாங்கிட வருவதை தடுக்க ரிசர்வ்வேசன் கவுண்டர்களில் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.