புதுடில்லி : ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய புள்ளியியல் கழகத்தின் தலைவராக பிரணாப் நீடிப்பதால், பிரணாபின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று சங்மா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சங்மாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சங்மாவின் வேட்புமனுவும் காலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.