தி.மு.க., நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க., சார்பில் நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தபோராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்க கோரி ஜாமீனில் வெளிவந்துள்ள தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சி.பி.ஐ., சிறப்புகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், தான் பார்லிமென்ட் உறுப்பினராகவும் இருப்பதாலும், கட்சி கட்டுப்பாட்டை மதித்து நடக்க வேண்டியுள்ளதாலும், நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இதனை விசாரித்த சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஓ.பி. சைனி, கனிமொழியின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்குவதாகவும், இதனால் ஜூலை 4 மற்றும் 5ம் தேதிகளில் ஆஜராக தேவையில்லை எனவும் கூறினார். மேலும் சி.பி.ஐ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவான, கனிமொழி கைதாகும் வாய்ப்பு இருப்பதால் நிராகரிக்கவேண்டும் எனற கோரிக்கையை நிராகரித்தார்.