ஐதராபாத் :நுழைவுத்தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், தொழிற்கல்லூரிகளில் படிக்கலாம் என்பது நம்பமுடிகிறதா? ஆம் என்கிறது ஆந்திர மாநிலம். ஆந்திர மாநிலத்தில், பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், பொறியியல், விவசாயம் , மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்விகளில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 40சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், நுழைவுத்தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர். இந்நிலையில், இந்த நுழைவுத்தேர்விற்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 90,917 மாணவர்களில், 83,686 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 78 பேரில், 22 பேரில் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும், அவர்களில் 9 பேர் பொறியியல் படிப்பிலும், 13 பேர் மருத்துவம் தவிர்த்த மற்ற படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர்.