பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த தமிழகம் மற்றும் புதுவை மாணவ மாணவிகளுக்கு விஜய் நிதி உதவி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் வடபழனியில் உள்ள ஜே.எஸ்.திருமண மஹாலில் நடந்தது. நிகழ்ச்சியில் 200 ஏழை மாணவ-மாணவிகளுக்கு ரூ.6 லட்சம் கல்வி உதவி தொகையும், உயர் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் உதவி தொகையும் நடிகர் விஜய் வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் ஆண்டுதோறும் இந்தப் பணியை தொடர்ந்து செய்வேன் என்றார். மேலும் அனைவருக்கும் கல்வி முக்கியமானது என்றும் மாணவ-மாணவிகள் நன்றாக படித்து பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்றும் கூறினார்.