மதுரை சோலைஅழகுபுரத்தை சேர்ந்தவர் காளிராஜன். லோடுமேனாக இருக்கும் இவர் கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் நித்தியானந்தா மீது தனது மகனை மீட்டு தரக்கோரி புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் எனது மூத்த மகன் வாசுமுத்து(24). பி.காம் பட்டதாரியான என் மகன் வேலை தேடி வந்தான். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு முதல் அவனை காணவில்லை. அவனைப்பற்றி விசாரித்தபோது, அவன் பிடதி ஆசிரமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. நான் என் மகனை மீட்டு வர பிடதி சென்றபோது, அவன் பித்து பிடித்தவன் போல இருந்தான். அவனை என்னுடன் அழைத்து வர எண்ணியபோது நித்தியானந்தா என்னை மிரட்டினார். எனது மகள் கல்யாணத்திற்கு கூட அவன் வரவில்லை. தற்போது நித்தியானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. என் மகனை நித்தியானந்தாவிடமிருந்து உடனே மீட்டு என்னிடம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.