கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் சிறுமி ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 9வயது சிறுவன் ஒருவனுக்கு முகத்தில் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை மேலும் அதிகமாக்கி உள்ளது. மேற்குவங்கம், முர்சிதாபாத்தில் தொழிலதிபர் ஒருவரது வீட்டில் 9வயது சிறுவன் ஒருவன் வேலைபார்த்து வந்துள்ளான். இந்த சிறுவனை வீட்டில் உள்ளவர்கள் அடிப்பது, உதைப்பது என்று மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கொடுமையின் உச்சமாக சிறுவனின் முகத்தில் இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர். கடைக்கு போய்விட்டு லேட்டாக வந்ததற்காக சிறுவனுக்கு சூடு வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த தொழிலதிபர் மீது இளம் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.