நடிகர், நடன இயக்குநர், தற்போது இயக்குநர் என்று பல துறைகளை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளவர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்பட்ட பிரபுதேவாவுக்கு ரமலத் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டு, அதனால், தனது காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.
நயன்தாராவும் தனது பங்குக்கு கையில் பிரபுதேவா பெயரை பச்சைக் குத்தினார். கிறித்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். விரைவில் திருமணம் என்றும், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். ஆனால் நடந்ததோ வேறு. இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தனர். நயன்தாரா சினிமாவில் நடிக்க வந்தார்.
இதுவரை அதற்கான காரணம் அறியப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நயன்தாராவுடன் காதல் முறிவுக்கு காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதல் முறையாக தனது மௌனத்தைக் கலைத்து பதில் அளித்துள்ளார் பிரபுதேவா.
"எனக்கு என் குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம். அவர்களுக்காக எதையும் இழப்பேன்" என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம், ரமலத்துடன் விவாகரத்தான பிறகு பிரபுதேவா, தனது பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழித்தது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால்தான் இருவருக்குள்ளும் பிரச்சினை எழுந்து பிரிந்துவிட்டதாக வந்த தகவல்கள் உண்மையாகியுள்ளன.