அஜித் நடித்துள்ள பில்லா-2 படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், இன்னொரு புத்தம் புதிய டிரைலரை ஜூலை 2ம் தேதி பிரம்மாண்ட விழா எடுத்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அஜித்தின் பில்லா வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக உருவாகியிருக்கும் படம் பில்லா-2. பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா, வித்யூத் ஜம்வால் என ஏகப்பட்ட நட்சத்திரங்களின் நடிப்பில், சக்ரி டோல்ட்டியின் இயக்கத்தில், யுவனின் மிரட்டல் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் புதிதாக ஒரு டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் முதல் முன்னோட்டம் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா போன்றவைகளை எந்த ஒரு விழாவும் வைக்காமல் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். ஆகையால் இந்த 2வது டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்து, அதற்காக வருகிற ஜூலை 2ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு விழா அரங்கில் விழாவுக்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் நடிகைகள் பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா உள்ளிட்ட படத்தில் நடித்த அத்தனை பேரும் பங்கேற்க உள்ளனர். அதேசமயம் இந்த விழாவில் நடிகர் அஜித் பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை.
ஜூலை 13ம் தேதி பில்லா-2 உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது.