புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அவரது தலைமையிலான குழு, ஜூலை 25ம் தேதி டில்லி ஜந்தர் மந்தரில் மேற்கொள்ள உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு டில்லி போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. வலுவான ஜன் லோக்பால் மசோதா, ஊழல் ஒழிப்பு, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டு வருதல் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி, அன்னா ஹசாரே குழு, ஜூலை 25ம் தேதி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், போலீஸ் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.