லண்டனில் நடந்த இந்திய திரைப்பட விழாவில், "ஆரண்ய காண்டம்' தமிழ் திரைப்படம், பார்வையாளர் விருதை பெற்றுள்ளது. லண்டனில், கடந்த மாதம் 20ம் தேதி, இந்திய திரைப்பட விழா துவங்கியது. சமீபத்தில், இந்த விழா நிறைவு பெற்றது. இயக்குனர் குமாரராஜா இயக்கி, ஜாக்கி ஷெராப், சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம், இந்த திரைப்பட விழாவில் பங்கேற்றது. இந்த படத்துக்கு, "மேற்கத்திய கூட்டமைப்பு பார்வையாளர் விருது' வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது கிடைத்ததற்காக, குமாரராஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.