நடிகர் சங்கப் பொதுக்குழுவில் பங்கேற்க நடிகர்கள் கமல், ரஜினி உள்பட 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் நடிகர் சரத்குமார் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் பொதுச்செயலாளராக ராதாரவி, துணைத் தலைவர்களாக விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளராக வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக, நடிகர் சங்கத்தின் பொதுக்குழு வரும் 7-ம் தேதி கூடுகிறது. தியாகராய நகரில் உள்ள ஜெர்மன் ஹாலில் நடைபெறும் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்குமாறு நடிகர்கள் கமல் ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விஜய், அஜித், விக்ரம் உள்பட நடிகைகள், நாடக நடிகர்கள் என 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் குழுவுக்கு ஒப்புதல், வரவு-செலவு தாக்கல், நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டுதல், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட பல விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படுகின்றன.
இதுவரை உறுப்பினராகப் பதிவு செய்யாத புதிய நடிகர், நடிகையர் விரைவில் உறுப்பினராகப் பதிவு செய்ய கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.