முகமூடி திரைப்படத்தின் ஆடியோ, வரும் 20 ம் தேதி வெளியிடப்படுகிறது. சத்யம் திரையரங்கில் மிக பிரமாண்ட முறையில் இந்த ஆடியோ வெளியீடு நடக்க இருக்கிறது. நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு முகமூடி திரைப்படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார். அதுமட்டுமின்றி ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் 500 பேரை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் போட்டி மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான போட்டியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. யுடிவி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜுவா முதன் முறையாக சூப்பர் ஹீரோ வேடம் ஏற்றுள்ளார். படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.