திருவண்ணாமலை: பால் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியபோது, சமூக சேவகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக கொலையாளி இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளம் எதிரே வசிப்பவர் ராஜ்மோகன் சந்திரா(53), இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.இன்று அதிகாலை பூனைகளுக்கு பால் வாங்க அருகே உள்ள பால் பூத்திற்கு ராஜ்மோகன் சந்திரா, தன் மொபட்டில் சென்றார். பால் வாங்கி கொண்டு காலை 6மணி அளவில் வீட்டுக்கு புறப்பட்டார்.சிங்கமுக தீர்த்த குளம் எதிரே மறைந்திருந்த ஒரு கும்பல், திடீரென மொபட்டில் வந்த ராஜ்மோகன் மீது மிளகாய் பொடியை தூவினர்.
இதனால் நிலை குலைந்த அவர் மொபட்டிலிருந்து கீழே விழுந்தார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய மர்ம கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார். எஸ்.பி., ரம்யா பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.பல்வேறு போலீசார், வக்கீல்கள் மற்றும் அதிகாரிகள் மீது இவர் பொது நல வழக்கு தொடர்ந்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரை வைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் போளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்னிலையில், திருவண்ணாமலை அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த சந்திரசேகரன்(29), வட ஆண்டாப்பட்டை சேர்ந்த முருகன்(32), ஆகியோர், கொலை செய்ததை ஒப்புகொண்டு, நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.