சென்னை:விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் பாசனவசதி பெறும் நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தே.மு.தி.க., சார்பில் 6ம்தேதி செஞ்சியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:திருவண்ணாமலை துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே, கீரனூர் அணைக்கட்டில் இருந்து இடது புறமாக கால்வாய் வெட்டி, அதன் மூலம் கால்வாயை திருப்பி, திருவண்ணாமலையில் 14 ஏரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் 10 ஏரிகளுக்கும், விழுப்புரம் வட்டத்தில் 12 ஏரிகளுக்கும் என 36 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது நந்தன் கால்வாய் திட்டம்.
இத்திட்டம் மூலம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 6,654 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. அவ்வப்போது நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதே தவிர அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த 14 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக தெரிகிறது. தொடர்ந்து ஆட்சிகள் மாறிக்கொண்டிருந்தாலும் விவசாயிகள் கண்ணீரை துடைக்க நந்தன் கால்வாயில் தண்ணீர் இதுவரை வந்தபாடில்லை. விவசாயிகள் நலன்கருதி நந்தன் கால்வாய் திட்டத்தை செப்பனிட வேண்டும். இக்கால்வாய் மூலம் பாசன வசதி கிடைக்க வழிவகை செய்யாத அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், இத்திட்டத்திற்கு முழுமையான நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வலியறுத்தியும், விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். வரும் 6ம்தேதி செஞ்சியில் நடக்கவுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பார்கள்.