புது தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் முனீஸ் சந்தர் ஜோஷி தனக்குப் பிறந்த பிள்ளைக்கு கூகுளின் பெயரைச் சூட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். உலகின் செல்வாக்கு பெற்ற இணையதளம் மற்றும் தேடுபொறியான கூகுளின் பெயர் பல்வேறு நாடுகளிலும் குழந்தைகளுக்கு சூட்டப்பட்டு வருகிறது.
2005ல் சுவீடன் நாட்டில் ஒரு தம்பதி தங்கள் குழந்தைக்கு ஆலிவர் கூகுள் கைய் என்று பெயர் சூட்டியிருந்தனர்.
இந்தியாவில் இதற்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த உமா, தங்கள் குழந்தைக்கு கூகுள் என்று செல்லப் பெயர் இட்டிருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், வீட்டில் எங்காவது வைத்துவிட்டுத் தேடும் ஒரு பொருளை குழந்தை 5 நிமிடத்தில் கண்டுபிடித்துத் தருகிறது என்பதுதான்! அதே காரணத்தை இந்த வழக்குரைஞரும் கூறியுள்ளார்.
முன்னர் அமெரிக்காவில் ஜான் ஸ்மித் என்பவர் தனது மகனுக்கு பெயர் சூட்டியது விநோதமாகப் பேசப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி குறித்த மொழிகள் வரவால், அவர் தனது மகனுக்கு "ஜான் ஸ்மித் வெர்ஷன் 2” என்று பெயர் சூட்டியிருந்தார்.