உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

04 July 2012

10-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிர்பிழைத்த 4 வயது சிறுமி

 மும்பையில் 10-வது மாடியிலிருந்து கீழே விழுந்த 4 வயது சிறுமி உயிர்பிழைத்த சம்பவம் நடந்துள்ளது. ஜூன் 11-ம் தேதியே இந்த சம்பவம் நடந்தாலும் இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் ஜூலை 2-ம் தேதி போலீசில் புகார் அளித்த பின்னர்தான் இதுகுறித்து வெளியே தெரியவந்தது.

மும்பை கார்கர் 19-வது செக்டாரில் ஒரு கட்டடத்தின் 10-வது மாடியில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. அங்கு பாரி யாதவ் என்பவர் தனது குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜூன் 11-ம் தேதி அந்த காப்பகத்தின் பால்கனியில் இருந்து குழந்தை கீழே விழுந்தது. எனினும் கீழே விழும்போது அடர்த்தியான மரம் ஒன்றில் விழுந்ததால் மரம் அவரைத் தாங்கிக் கொண்டது. இதனால் காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.
பாரி யாதவின் வீடும் அந்த கட்டடத்தின் 9-வது மாடியில் உள்ளது. எனினும் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் காப்பகத்தில் குழந்தையை விட்டுச் செல்வது வழக்கம்.
இதுகுறித்து அந்த குழந்தையின் தாயார் அனுபம் யாதவ் கூறுகையில், ஜூன் 11-ம் தேதியன்று காப்பகத்தில் இருந்து எனக்கு தொலைபேசி வந்தது. குழந்தை பால்கனியில் இருந்து விழுந்துவிட்டதாக தெரிவித்தார்கள். மருத்துவமனைக்கு வந்துபார்த்தபோது குழந்தைக்கு தொடை மற்றும் கண்ணில் காயம் ஏற்பட்டிருந்தது என்றார்.
இதுதொடர்பாக கார்கர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோல பொறுப்பில்லாதவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தது என்னுடைய தவறுதான் என அனுபம் யாதவ் தெரிவித்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT