நாமக்கல் மாவட்டம் திருமால்பட்டி மலைப்பகுதியில், விஷமருந்தி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் நவநீ பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (27). லாரி டிரைவரான இவருக்கும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த நிர்மலா (25) வுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கள்ளத்தொடர்பினால், இருவரது குடும்பத்திற்குள்ளும் பிரச்னைகள் இருந்து வந்தன. இந்நிலையில், திருமால்பட்டி மலைப்பகுதிக்கு சென்ற இவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். சம்பவ இடத்திலேயே சக்திவேல் பலியானார். தகவலறிந்த அப்பகுதி மக்கள், இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நிர்மலாவும் பலியானார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.