சந்திரமுகி, அய்யா வழி, கிச்சா வயது 16, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ரவிக்குமார் என்பவர் இயக்கி, அவரே நாயகனாகவும் நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது ரவிக்குமாருக்கும், சுஜிபாலாவுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைகொடி காட்டியதை தொடர்ந்து இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகைகள் ஷகீலா, அல்போன்சா, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.