சிவாஜி கணேசன் நடித்து வெளியான புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட கர்ணன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு திரைக்கு வந்தது.
வயதானவர்கள் மட்டும் இல்லாமல், இளைஞர்களும் அப்படத்திற்கு ஆதரவு கொடுத்து கர்ணன் படம் பெரும் வெற்றிபெறக் காரணமாக இருந்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு மற்றொரு சுவையான விருந்து படைக்கும் வகையில், சிவாஜி கணேசன் - சாவித்ரி, ஜெமினி கணேசன் நடித்து வெளியாகி அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்ட `பாசமலர்' திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட உள்ளது.
விரைவில், பாசமலர் திரைப்படம் நமது பிரம்மாண்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. சிவாஜி ரசிகர்களுக்கும், பழைய காலப் படங்களின் ரசிகர்களுக்கும் நிச்சயம் இது ஒரு மகிழ்ச்சியான தகவலாக இருக்கும் என்று நம்புகிறோம்.