சேலத்தில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை கண்டித்து 12 பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து இன்று காலை தி.மு.க.வைச்சேர்ந்த சிலர் 12 மாநகர அரசு பஸ் மற்றும் 2 புறநகர் பஸ்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா என்ற தர்மராஜா, சுப்ரமணி, சுப்புடு என்ற சுப்ரமணி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். -KRK NETWORK-