புதுக்கோட்டை இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாட முடியாத நிலையில் அதிமுக இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக டெபாசிட் தொகையை இழக்காமல் 30,500 வாக்குகள் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது:
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெறாவிட்டாலும், 50 ஆயிரம் வாக்குகள் பெறுவோம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 30 ஆயிரம் வாக்குகளே கிடைத்து உள்ளது.இந்த வாக்குகளும் நாம் ஏறுமுகத்தில் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.
டெபாசிட் தொகையைக்கூட பெற மாட்டோம் என்று கூறிய ஆளுங்கட்சி, இப்போது பெற்ற வெற்றியையே கொண்டாட முடியாத நிலையில் இருந்து வருகிறது. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் பார்க்கவே மறுத்துவிட்டதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் நம்மைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் நாம் வெற்றிபெற்றதாகத்தான் அர்த்தம் என்றார் விஜயகாந்த்.
மோதிரம் பரிசளிப்பு: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பணியாற்றிய தேமுதிக நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டி விஜயகாந்த் விருந்து அளித்தார். இதில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையிலான நிர்வாகிகளைப் பாராட்டினார். இவர் தலைமையில் செயல்பட்ட 3 ஒன்றிய செயலாளர் பொறுப்பு வகித்த மூன்று பூத்துகளில் அதிமுகவைவிட தேமுதிக அதிக வாக்குகள் பெற்றுள்ளன. இதற்குப் பாராட்டு தெரிவித்ததுடன் 3 ஒன்றியச் செயலாளர்களுக்கும் 4 கிராம் தங்க மோதிரத்தை விஜயகாந்த் அணிவித்தார்.
கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.