துப்பறியும் ஆனந்த் திரைப்படத்தின் மூலம் சூர்யா-கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் கவுதம் மேனன் இன்று வெளியிட்டார். யோகன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்திற்குப் பிறகு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். துப்பறியும் ஆனந்த் திரைப்படம் 2013ல் திரைக்கு வர இருக்கிறது. மேலும் சூர்யா கூறுகையில் துப்பறியும் ஆனந்த் திரைப்படத்தில் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் என்றார். -KRK NETWORK-