அரசியல் புயலில் சிக்கியதால், சில காலம் சினிமாவை விட்டே ஒதுங்கிய வைகைப் புயல் வடிவேலு, மீண்டும் களத்தில் குதிக்கப் போவதாக சொல்கிறார். அடுத்து சினிமாவில் நடித்தால், ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை வைத்து, "இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தை இயக்கிய சிம்புதேவன், ஏற்கனவே ஒரு, "ஸ்கிரிப்ட் தயார் செய்து, அதை படமாக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில், தற்போது புதுமுக டைரக்டர் ஒருவர், "தெனாலிராமன் என்ற தலைப்பில், ஒரு கதை சொன்னார். ரொம்ப அருமையாக இருந்தது. அதனால், அந்த படத்திலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளேன். வெகு விரைவிலேயே, இந்த படங்களில் நான் நடிப்பது குறித்த செய்திகள் வெளியாகும். இவ்வாறு கூறியுள்ளார் வடிவேலு.