தமிழ் திரையுலகை அடுத்த களத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர்களில் ஒருவர் அமீர். இவர் இயக்கும் படத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒன்றை காணலாம். அப்படி படத்துக்கு படம் வித்தியாசம் காட்டக்கூடியவர். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆதி பகவன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் ஜெயம் ரவிக்கு இரு வேடங்கள். அதில் ஒரு வேடம்தான் திரு நங்கை. முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் இவர் அதிலும் நடிப்புக்கு சவால் அளிக்கும் கேரக்டரை ஏற்றுள்ளார். இது ஒரு புது முயற்சி மட்டுமல்ல தைரியமான ஒன்றும் கூட. படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீது சந்திரா நடிக்கிறார். யுவன் சங்கர் இசையமைக்கிறார்.