திருநெல்வேலி: நெல்லையில் சினிமா படம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வசனங்கள் பேசி நடித்ததாக காமெடி நடிகரின் உருவ பொம்மையினை ஒரு அமைப்பினர் எரித்து போராட்டம் நடத்தினர். சமீபத்தில் வெளியான முரட்டுக்காளை திரைபடத்தில் , பிரபல காமெடி நடிகர் விவேக் , தமிழக மக்கள் முன்னேற்றக்கழக கட்சித்தலைவரை விமர்சித்து பேசியதாக எழுந்த புகாரின் பேரில் இன்று நெல்லையில் தியேட்டர் முன்பு கூடிய மல்லர் மாநாடு அமைப்பைச சேர்ந்த சிலர் காமெடி நடிகரின் உருவபொம்மையினை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.